முழு கொள்ளளவை எட்ட போகும் வைகை அணை | vaigai dam
தேனி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக, பெய்த மழையின் காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், 71 அடி முழுகொள் அளவை கொண்ட வைகை அணையில், தற்போது சுமார் 70.5 அடி வரை தண்ணீர் நிரம்பியுள்ளது. தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணைக்கான நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அணை முழுகொள் அளவை எட்டியவுடன், அணைக்கு வரும் நீரானது வெளியேற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story