"கலெக்டர் ஆபீஸ்ல பாம் வச்சிருக்கேன்" போலீசாருக்கு வந்த பகீர் மிரட்டல்

x

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார். நள்ளிரவில் போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பேசிய ஒருவர், தான் விழுப்புரத்தில் இருந்து பேசுவதாகவும், விழுப்புரம் கலெக்டர் அலுவலகம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாக பேசிவிட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்துவிட்டார். உடனடியாக விசாரணை நடத்திய போலீசார், வெடுகுண்டு மிரட்டல் விடுத்த முத்தோப்பு அகரம்பாட்டை சேர்ந்த கூலித்தொழிலாளி விமல்ராஜ் என்பவரை கைது செய்தனர். போலீசாரை பழிவாங்க வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கூறிய அவரிடம், தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்