விடுதியில் மாணவ, மாணவி எடுத்த விபரீத முடிவு.. விருதுநகர் அருகே பரபரப்பு

x

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் பகுதியில் உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில், ஆந்திரா மாநில் ஆனந்தபூர் மாவட்டத்தை சேர்ந்த மஞ்சுநாத் என்ற இளைஞரும், அதே பகுதியை சேர்ந்த அகிலா என்ற மாணவியும், விடுதியில் தங்கி பி.டெக் படித்து வந்தனர். இந்த நிலையில், மஞ்சுநாத் மற்றும் அகிலா, அவரவர் தங்கி இருந்த விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்