லேப்டாப் சார்ஜ் செய்தபோது இளம்பெண் பலி.. பக்கத்து வீட்டுக்காரர் சொன்ன பகீர் தகவல்
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே லேப்டாப் சார்ஜ் செய்தபோது மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். சொக்கநாதன்புத்தூரைச் சேர்ந்த ராஜாராம் என்பவரின் மனைவி செந்திமயில், தமது லேப்டாப்பிற்கு சார்ஜ் செய்ய முயன்றுள்ளார். அப்போது, எதிர்ப்பாராதவிதமாக, மின்சாரம் தாக்கியதில் செந்தில் மயில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, சேத்தூர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story