50 ஆண்டுகளுக்கு பின் நடந்த அதிசயம் - அமைச்சர்கள் முதல் மக்கள் வரை.. பார்க்க படையெடுக்கும் கூட்டம்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே 50 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு நந்திக்குண்டு கால்வாயில் தண்ணீர் வந்ததால் மக்கள் உற்சாகமடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே சென்னம்பட்டி அணைக்கட்டு திட்டம் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டாலும், பல்வேறு காரணங்களால் முடிக்கப்படாமல் இருந்தது. இந்த சூழலில், சென்னம்பட்டி அணைக்கட்டு கால்வாய் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி அளித்திருந்த நிலையில், இதனை நிறைவேற்றும் விதமாக 16 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனிடையே, கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் சென்னம்பட்டி வலது கால்வாயில் முதன்முறையாக நீர் வந்தது. இதனை அறிந்து அமைச்சர் தங்கம் தென்னரசு மலர்தூவி வரவேற்ற நிலையில், மக்கள் மீன்பிடித்து உற்சாகமடைந்தனர்.
Next Story