முடி வெட்டி வெளியே வந்த அதிமுக நிர்வாகி கழுத்தை சீவ வந்த அருவா -விருதுநகரில் அதிர்ச்சி
அருப்புக்கோட்டை, சின்னப்புளியம்பட்டியை சேர்ந்தவர் பாலாஜி. 40 வயதான இவர், தன் மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வரும் நிலையில், அதிமுக இளம் பாசறை அணியின் அருப்புக்கோட்டை நகர செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவரை, சம்பவத்தன்று சலூன் கடையில் சிகை அலங்காரம் செய்து விட்டு வெளியே வந்த போது, அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் பாலாஜியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காயமடைந்த பாலாஜியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்திருக்கும் போலீசார், தலைமறைவாக உள்ள சுரேஷை தேடி வருகின்றனர்
Next Story