விருதுநகரில் புதிய மெத்தனால் ஆலை?நாள் ஒன்றுக்கு 4 லட்சம் லிட்டர்... அச்சத்தில் விவசாயிகள்

x

விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக அமையவுள்ள மெத்தனால் ஆலைக்கு தண்ணீர் எடுத்தால் விவசாயம் பாதிக்கும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே நாசர்புளியங்குளம் பகுதியில் புதிதாக அமைய உள்ள எத்தனால் தொழிற்சாலைக்கு நாள்தோறும் நான்கு போர்களில் இருந்து 4 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, உடைத்த அரிசி, மக்காச்சோளம் மூலம் நாள்தோறும் 1 லட்சம் லிட்டர் எத்தனால் எடுத்து மத்திய அரசுக்கு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் அறிக்கையின்படி, மேலக்கள்ளங்குளம் கிராமத்தில் தனியார் நிறுவனம் மூலம் புதிய எத்தனால் ஆலை, சுமார் 18 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்