வனத்துறையினர் மீது சுற்றுலா பயணிகள் புகார்

x

வனத்துறையினர் மீது சுற்றுலா பயணிகள் புகார்

ராஜபாளையம் அருகே உள்ள அய்யனார் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் வனத்துறையினர் அடாவடி வசூலில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அய்யனார் கோவிலுக்கு ஏராளாமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சில இடங்களுக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். இருப்பினும், வனத்துறையினருக்கு வேண்டிய நபர்களை மட்டும் உள்ளே அனுமதிப்பதாக சுற்றுலா பயணிகள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும், அய்யனார் கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பொதுமக்களிடம் வனத்துறையினர் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், பணம் கொடுக்காதவர்களை உள்ளே அனுப்புவதில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட வனத்துறை ஊழியர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்