விடிய விடிய நடந்த வினோத ரேஸ்...மனைவியை சுமந்து ஓடும் கணவன்மார்கள்..viral video

x

நாய் ரேஸ், சைக்கிள் ரேஸ், பைக் ரேஸ், கார் ரேஸ், கரப்பான் பூச்சி ரேஸ்னு இப்டி பல வகையான ரேஸ்கள பாத்த நமக்கு... lawn mower ரேஸ்னா எப்படி இருக்கும்குறதை காட்டுறதுக்காக ஒரு மிரட்டல் சம்பவத்தை காட்டிருக்கு இந்த கும்பல்...

ஆகஸ்ட் மாசம் வந்தாலே இங்கிலாந்து நாட்டுல தெரிக்க விடுற திருவிழானா அது இந்த lawn mower ரேஸ் தான்...

புற்களை வெட்டுறதுக்காகவே ஒரு அசோசியேட்ட உருவாக்கி கிட்ட தட்ட 50 வருசம் மேல ஆகிடுச்சாம்...

சோ... அதை கொண்டாடும் விதமா... இந்த புல்லு வெட்டுற காரை வச்சு ரேஸ் நடத்திருக்காங்க இந்த ஊர் காரங்க... சரி ரேஸ் தானே சும்மா கொஞ்ச நேரத்துல முடிஞ்சுடும்னு நெனச்சா அங்க தான் ஒரு டிவிஸ்ட்டே... அதாவது 500 ரவுண்டுகளை கொண்ட இந்த ரேஸ்... ரெண்டு நாளைக்கு நடக்குமாம்... அப்டி ராப்பகலா நடக்குற இந்த போட்லடி 500 ரவுன்ட் அடிச்சு யாரு முதல்ல வராங்களோ... அவங்களுக்கு மீனா மாலை போட்டு ஒரு நாளும் உனை மறவாத...னு டூயட் பாடுவாங்களாம்... ஹ்ம்ம் அச்சச்சோ சாரிங்க... கண்டன்ட்ட மிஸ் பண்ணி எஜமான் படத்துக்கு போயிட்டேன்...

சனிக்கிழமை காலைல 8 மணிக்கு ஆரம்பிச்ச போட்டி ஞாயிற்று கிழமை காலைல 8 மணிக்கு முடிஞ்சுருக்கு...

பட் பைனல்லா இந்த அசாத்திய ரேஸ்லயும் ஒருத்தர் வெற்றி வாகைய சூடி சோப்பு டப்பாவ வாங்கிட்டாருங்குறது தான் மாஸ்ஸான சம்பவம்...

"மனைவியிடம் மாங்கு மாங்கென்று மிதிவாங்கும் கணவரா நீங்கள்... உங்கள் மனைவியை திருப்பி பழிவாங்க.... ஓர் அறிய வாய்ப்பு இதோ உங்களுக்காக..."

வீட்டுல சிவனேன்னு சீரியல் பார்த்துக்கிட்டு இருந்த வீட்டுக்காறம்மாவ கூட்டிட்டு வந்து... கேம்ங்குற பேர்ல சேத்து தண்ணில தலைகீழா தூக்கிட்டு ஓட்றது தான் Wife carrying விளையாட்டு...


Next Story

மேலும் செய்திகள்