விநாயகரை பார்த்ததும் VIBE-ஆன இஸ்லாமியர்.. சாம்பிராணி போட்டு செம குத்து..வித்தியாசம் காட்டும் தமிழகம்
ராமநாதபுரத்தில் 44 இடங்களில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கடந்த 2 நாட்களாக அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இந்நிலையில் வழிவிடு முருகன் கோவிலில் தொடங்கி வண்டிக்கார தெரு, அக்ரகாரம் சாலை வழியாக விநாயகர் ஊர்வலம் நடைபெற்று, நொச்சி வயல் ஊரணியில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. விநாயகர் ஊர்வலத்தின் போது இஸ்லாமியர் ஒருவர், விநாயகர் சிலைகளுக்கு சாம்பிராணி புகை போட்டு ஆடிப்பாடி ஊர்வலத்தில் பங்கேற்றது கவனத்தை ஈர்த்தது.
Next Story