விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலவரம்.. பற்றி எரிந்த கடைகள்.. பைக்குகள்.. கர்நாடகாவில் 144
கர்நாடக மாநிலம் மாண்டியா அருகே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாகமங்கலாவின் பதரிகொப்பா பகுதியில் விநாயகர் சிலையை ஆற்றில் கரைப்பதற்காக ஒரு தரப்பினர் எடுத்து சென்றுள்ளனர். மசூதி அருகே ஊர்வலம் சென்று கொண்டிருந்தபோது திடீரென அங்கு நின்று கொண்டிருந்த சில இளைஞர்களுக்கும், ஊர்வலத்தில் பங்கேற்று இருந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அது கைகலப்பாக மாறிய நிலையில் இரு தப்பினரும் கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கிக்கொண்டனர். அப்போது சாலையின் இருபுறமும் இருந்த தள்ளு வண்டி கடைகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டதால் பதற்றம் நிலவியது.
Next Story