பத்திரப்பதிவு நடக்கும்போதே உள்ளே புகுந்த விஜிலென்ஸ்...கையும் களவுமாக சிக்கிய அதிகாரிகள்

x

பத்திரப்பதிவு நடக்கும்போதே உள்ளே புகுந்த விஜிலென்ஸ்...கையும் களவுமாக சிக்கிய அதிகாரிகள்

விழுப்புரத்தில் உள்ள பதிவுத்துறை இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

விழுப்புரம் திரு.வி.க.சாலையில் உள்ள பதிவுத்துறை இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒரு நாளைக்கு 50க்கும் மேற்பட்ட பத்திரப்பதிவு நடைபெறும் என்றும் , அங்கு வரும் பொது மக்களிடம் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து விழுப்புரம் பதிவுத்துறை இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை

போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது

இணை சார்பதிவாளர் , ஊழியர்கள் மற்றும் பத்திரப்பதிவு செய்ய வந்த பொதுமக்களிடமும் விசாரணை மேற்கொண்டனர். நள்ளிரவு வரை நடைபெற்ற இந்த சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாயும், முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக

தகவல் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்