ஒரே நாளில் தலைகீழாக புரட்டி போட்ட கனமழை - தவிக்கும் விழுப்புரம் மக்கள்

x

விழுப்புரத்தில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் நரிக்குறவர் இன மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்...

விழுப்புரம் நகராட்சி ஆஷா குலம் பகுதியில்

வசித்து வரும் நரிக்குறவர் இன மக்களுக்கு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் காலத்தில் பட்டா வழங்கப்பட்டு...முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் வீடு தரப்பட்டது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் அந்த வீடுகளில் வசித்து வரும் நிலையில் தற்போது வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. அதேபோல் வடிகால் வசதி இல்லாததால் பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் அவதி அடைந்துள்ளனர். கன மழை காரணமாக குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்த நிலையில் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது... ஆஷா குலம் பகுதிக்கு விழுப்புரம் சட்டக் கல்லூரியில் இருந்து வெளியேறும் தண்ணீரும், மேல்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் தண்ணீரும் கழிவு நீர் கலந்து வந்து தேங்கி நிற்பதாக நரிக்குறவர் இன மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்... மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்