மாநாட்டில் இறந்த தவெக தொண்டர்.. இறப்பதற்கு முன் எடுத்த கடைசி வீடியோ - பார்த்தாலே கலங்கும் கண்கள்
விழுப்புரம் மாவட்டம் வி.சாலையில் நடைபெற்ற த.வெ.க மாநாட்டிற்கு சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த சார்லஸ் சென்றார். அங்கு திடீரென நெஞ்சுவலியால் துடித்த அவர், மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சார்லஸ் உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உயிரிழந்த இளைஞர் சார்லஸ் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என அவரது உறவினர்கள், நண்பர்கள் வலியுறுத்தியுள்ளனர். இறப்பதற்கு முன், வேனில் மகிழ்ச்சியுடன் சார்லஸ் நடனமாடும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
Next Story