வராக நதி அருகே கிடந்த தாய், மகன் சடலம் - விழுப்புரத்தில் அதிர்ச்சி

x

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே, வராக நதிக் கரையோரத்தில் தாயுடன் மகன் சடலமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கரை அருகேயுள்ள குட்டையில் கர்நாடகாவை சேர்ந்த தேவி மற்றும் அவரின் மகனான 14 வயது சிறுவன் ராகுல் என்பவரும் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தனர். அருகிலுள்ள செவலை கிராமத்தின் கோயில் திருவிழாவுக்கு இருவரும் வந்ததாக கூறப்படும் நிலையில், இருவரும் கொலை செய்யப்பட்டனரா அல்ல தற்கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்