"விழுப்புரத்தில் சாராயம் குடித்தவருக்கு சென்னையில் சிகிச்சை"

x

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் 17 ஆம் தேதி சாராயம் வாங்கி குடித்த தொழிலாளி கிருஷ்ணசாமிக்கு சென்னையில் சிகிச்சை நடைபெறுவதாக வந்திருக்கும் செய்தி அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். கிருஷ்ணசாமி உயிரை மருத்துவர்கள் காப்பாற்றி விட்டாலும், கண்பார்வை பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது என அறிக்கையில் கூறியிருக்கும் அவர், இது கள்ளக்குறிச்சி போல் விழுப்புரத்திலும் நச்சு சாராயம் விற்கப்பட்டதா என்ற கேள்வியை எழுப்புகிறது. விழுப்புரம் பகுதியிலும் யாருக்காவது வயிற்று வலி, கண் எரிச்சல் பாதிப்பு இருக்கிறதா என்பதை விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இந்த நிகழ்வுகள் தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறது என்பதை உறுதி செய்வதாக குறிப்பிட்டுள்ள ராமதாஸ், இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்