சப் ஜெயிலுக்குள் என்ன நடந்தது?..நேரில் பார்த்ததும் மாஜிஸ்திரேட் ஆர்டர்
சப் ஜெயிலுக்குள் என்ன நடந்தது?..நேரில் பார்த்ததும் மாஜிஸ்திரேட் ஆர்டர் - 2 டாக்டர்கள் முன்னால் போஸ்ட்மார்ட்டம்
விழுப்புரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிடிவாரண்டு கைதி திடீரென உயிரிழந்தது தொடர்பாக, மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி வருகிறார்.விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவை சேர்ந்தவர் அற்புதராஜ். வழக்கு ஒன்றில் தலைமறைவாக இருந்த அற்புதராஜை, 2 நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்து, கிளை சிறையில் அடைத்தனர். இந்நிலையில், அற்புதராஜ் சிறையில் மயங்கி கிடந்து உயிரிழந்துள்ளார். இதையடுத்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். ஆனால், போலீசார் தாக்கியதால்தான் அற்புதராஜ் இறந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து, விசாரணை மேற்கொண்ட மாஜிஸ்திரேட் ராதிகா, உடலில் காயங்கள் உள்ளனவா என்று நேரில் பார்வையிட்டார். பின்னர், 2 டாக்டர்கள் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்தவும் உத்தரவிட்டார். சிறையில் அற்புதராஜுடன் இருந்த கைதிகளிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளார். பிரேத பரிசோதனை முடிவுக்குப் பின்னர், அற்புதராஜின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.