"பொதுமக்களே வசிக்காத பகுதியில் தேவையில்லாமல் சாலை?" - கொந்தளிக்கும் பொதுமக்கள் | Villupuram | Road

x

விழுப்புரம் மரக்காணம் அருகே பொதுமக்களே வசிக்காத பகுதியில் தேவையின்றி சாலை அமைப்பதாக ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்... ஏரி மற்றும் குட்டை பகுதியான கோனவாயன் குப்பத்திலிருந்து எக்கியர் குப்பம் கடற்கரை நோக்கி விவசாய நிலங்களுக்கு மத்தியில் செல்லும் வண்டிப் பாதையில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.. இதற்காக அங்குள்ள பனை மரங்கள் அகற்றப் பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்... போராட்டத்தில் ஈடுபடப் போவதாய் அவர்கள் எச்சரித்த நிலையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தபோதும் ஊர் மக்கள் சாலை அமைக்க தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்