விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்த அதிமுக.. சர்ப்ரைஸாக போட்டியிடும் 6வது வேட்பாளர்

x

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்த அதிமுக.. சர்ப்ரைஸாக போட்டியிடும் 6வது வேட்பாளர்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு எந்திரங்களை, தொழில்நுட்ப ஊழியர்கள் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு, ஜூலை 10ம் தேதி 275 வாக்குச்சாவடிகளில் நடைபெறவுள்ளது. இதற்காக பயன்படுத்தப்படாமல் இருப்பில் வைக்கப்பட்டிருந்த 575 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 575 கட்டுப்பாட்டு கருவிகள், 575 வி.வி.பேட் கருவிகள் ஆகியவை விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. இந்நிலையில் பெங்களூரு பெல் நிறுவனத்தில் இருந்து வந்துள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். பழைய பேட்டரிகளை அகற்றிவிட்டு சுத்தம் செய்த நிலையில், வாக்குப்பதிவு கருவிகளுடன், கட்டுப்பாட்டு கருவிகளுக்கான வயர்கள் சரியாக உள்ளனவா என்றும் சோதனை நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்