அதிர்ந்த விஜயகாந்த் தொண்டர்கள்... உள்ளே புகுந்த கும்பல் அட்டகாசம்
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விஜயகாந்த் இறப்பதற்கு முன்பு வரை அவரது பேஸ்புக் பக்கத்தில், தேமுதிக கட்சி தொடர்பான செய்திகளே பதிவிடப்பட்டு வந்தன. விஜயகாந்தின் இறப்பிற்கு பின்பு கடைசியாக ஜனவரி 24-ஆம் தேதி விஜயகாந்தின் நினைவேந்தல் நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்கள் பதிவிடப்பட்டன. இந்நிலையில் விஜயகாந்தின் பேஸ்புக் பக்கத்தை மர்மநபர்கள் ஹேக் செய்துள்ள நிலையில், கடந்த 2 நாட்களாக சம்பந்தமில்லாத புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தேமுதிக தொண்டர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Next Story