பாமக, விசிக முடிவையே தலைகீழாக புரட்டிய விஜய்யின் கன்னி பேச்சு.. கேப்டனுக்கே நடக்காத அரசியல் அதிசயம்
பாமக... விசிக... வரவேற்க... விஜய் விக்கிரவாண்டி மாநாட்டில் தனிக்கவனம் பெற்றிருக்கும் வடமாவட்ட அரசியல் களம் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு
ராம்ப் வாக்கில் வந்த விஜயை அங்கிருந்த ரசிகர்கள் மட்டுமல்ல, வடமாவட்டங்களில் கணிசமாக களமாடும் அரசியல் கட்சிகளும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றிருப்பது அரசியலில் ஹைலைட்...
ஜார்ஜ் கோட்டை அரியணையை பிடிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் வடமாவட்டங்களில் பாமக... விசிக... செல்வாக்கு செலுத்தும் கட்சிகளாகவே வலம் வருகின்றன.
இப்போது அங்கேயே மாநாட்டை போட்டு செல்வாக்கை காட்டியிருக்கிறார் விஜய்.
அதோடு மட்டுமல்ல எங்களோடு கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று அறிவித்துள்ளார் விஜய்... விஜயின் இந்த அறிவிப்பை பாமகவும்.. விசிகவும் வரவேற்றுள்ளது.
அதிகாரத்தில் அனைவருக்கும் சம பங்கு என்பது அடிப்படை உரிமை என்பதை முதல் மாநாட்டிலேயே பேசிய விஜய்-க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் விசிக இணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா...
ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற எங்கள் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஆதரவு குரல் தமிழ்நாட்டில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது.
தமிழ்நாடு அரசியல் களம் புதிய பாதையை நோக்கிப் பயணப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார் ஆதவ் அர்ஜுனா... முன்னதாக மாநாடு வெற்றியடையும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்....
வழக்கமாக நடிகர்கள் அரசியல் வருகையை எதிர்க்கும் பாமகவும்... விஜய் எங்கள் கொள்கையையே பேசுகிறார் என வரவேற்றுள்ளது
இரு கட்சிகளுமே விஜய்காந்த் 2006-ல் விருதாச்சலத்தில் போட்டியிட்ட போது எதிர்ப்பை தெரிவித்தன. மதுரையில் மாநாடு போட்டு திமுகவும்... அதிமுகவும் எனக்கு எதிரி என்று கூறி அரசியலில் களமிறங்கிய விஜய்காந்த் விருதாச்சலத்தில் போட்டியிட்டார். நடிகர்கள் அரசியல் வருவதை எதிர்க்கும் பாமக, விஜய்காந்தை எதிர்த்து. அங்கு பாமகவை தோற்கடித்து வெற்றியை வசமாக்கியிருந்தார் விஜய்காந்த்.
இப்போது விஜயை இரு கட்சிகளும் வரவேற்றுள்ளன.
விஜய் மாநாட்டு பந்தலில் அஞ்சலை அம்மாள் பேனர் தனிக்கவனம் பெற்றது. பேனரில் மட்டுமல்ல விஜய் பேச்சிலும் பிரதான இடம்பிடித்தார் அஞ்சலை அம்மாள்..
ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் கலந்துக் கொண்ட அஞ்சலை அம்மாள் கடலூர் மாவட்டம் முதுநகரை சேர்ந்தவர்.
வடமாவட்டங்களில் வீரமிக்க பெண்மணியாக திகழ்ந்த, போற்றப்படும் அஞ்சலை அம்மாளை முன்நிறுத்தி தனிக்கவனம் பெற்றிருக்கிறார் விஜய். இவையெல்லாம் விஜயின் வடமாவட்ட அரசியல் வியூக பேச்சை அரசியல் களத்தில் வலுவாக்கியிருக்கிறது