கல் நெஞ்சையும் உடைந்து அழவைக்கும் மதுரைசிறுவனின் பரிதாப நிலை- கண்கலங்கி ஓடிவந்து உயிர் கொடுத்த விஜய்

x

தந்தி டிவி செய்தி எதிரொலியாக பெற்றோரை இழந்த13 வயது சிறுவன் இருதய நோயால் உயிருக்கு போராடி வந்தது வெளிச்சத்திற்கு வந்த நிலையில், 12 லட்ச ரூபாய் செலவில் அறுவை சிகிச்சை செய்ய உதவிக்கரம் நீண்டிருக்கிறது.. இதுபற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

விஜய் அண்ணன் இல்லையென்றால் என் தம்பியை உயிருடனே பார்த்திருக்க முடியாது என நா தழுதழுக்கக் கண்ணீர் வடிக்கும் மதுரையைச் சேர்ந்த பாரதியின் 13 வயது இளைய சகோதரர் தான் விஷ்வா...

தாயும் இல்லை...தந்தையும் இல்லை...பாட்டியிடம் தான் வளர்கின்றனர் 3 பிள்ளைகளும்...

தாய் தந்தையாக இருந்து குடும்பத்தை கவனித்துக் கொள்வது அண்ணன் பாரதி தான்...

தனது சொற்ப வருமானத்தை வைத்துக் கொண்டு குடும்பத்தைப் பார்த்துக் கொள்வதா?...இல்லை இதய நோயால் பாதிக்கப்பட்ட தன் தம்பி விஷ்வாவுக்கு அறுவை சிகிச்சை செய்வதா?... என திக்குமுக்காடிப் போனார் பாரதி...

1லட்சம் 2 லட்சம் என்றால் பரவாயில்லை...12 லட்சத்திற்கு எங்கு செல்லும் இந்த ஏழைக்குடும்பம்?...

இருதய பாதிப்பை சரி செய்யாவிட்டால் விஷ்வா உயிர் பிழைப்பதே கடினம் என்ற சூழலில்...இது தொடர்பான செய்தி நமது தந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது...

இதைக் கண்ட விஜய்யின் மதுரை மாவட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் பன்னாட்டு அரிமா சங்க பிரதிநிதிகள் உதவியுடன் 12 லட்சம் ரூபாய் நிதி திரட்டி...சென்னையில் உள்ள மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடக்க உதவினர்...

தற்போது சிறுவன் விஷ்வா நல்ல உடல்நலத்துடன் மறுவாழ்வு பெற்றுள்ள நிலையில்...தன் உயிரைக் காக்க உதவிய நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க விரும்பியுள்ளார்...

இதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்... விஷ்வா மற்றும் அவரது குடும்பத்தை நேரில் அழைத்து நலம் விசாரித்ததுடன் விரைவில் நடிகர் விஜய்யை சந்திக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்...

சிறுவன் விஷ்வாவின் கல்விச் செலவையும் தமிழக வெற்றிக் கழகமே ஏற்கும் என புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளது நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது...

விஜய் கட்சி நிர்வாகிகளின் தன்னலமற்ற இந்த உதவி பாராட்டுகளைப் பெற்றுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்