ஊழியர்களை கேள்விகளால் கதறவிட்ட விஜிலென்ஸ்.. திடீர் என்ட்ரி கொடுத்த கட்டுவிரியன்

x

பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையின்போது, திடீரென கட்டுவிரியன் பாம்பு ஒன்று புகுந்ததால் அதிகாரிகள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை டிஎஸ்பி ராமச்சந்திர மூர்த்தி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கணக்கில் வராத பணத்தை கைப்பற்றிய அதிகாரிகள் அதுகுறித்து அங்குள்ள ஊழியர்களிடம் விசாரித்து கொண்டிருந்தனர். அப்போது, திடீரென அலுவலகத்திற்குள் கட்டுவிரியன் பாம்பு ஒன்று புகுந்ததால் அதிகாரிகள் சிலர் அலறியடித்துக்கொண்டு ஓடினர். சுதாரித்துக்கொண்ட ஊழியர் ஒருவர் கையில் கிடைத்த கோப்புகளையும், பிளாஸ்டிக் டப்பாவையும் தூக்கிபோட்டு கட்டுவிரியன் பாம்பை அடித்து அப்புறப்படுத்தினர். செய்தியாளர்கள் படம் எடுத்ததை பார்த்த அதிகாரிகள் உடனடியாக ஓடிவந்து கதவை தாழிட்டுக் கொண்டனர். சார்பதிவாளர் அலுவலக ஊழியர்களை ரைடு என்ற பெயரில் அலறவிட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரை கட்டுவிரியன் பாம்பு அலறவிட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது


Next Story

மேலும் செய்திகள்