வெற்றிமாறன் சார் ப்ளீஸ்...! மேடையில் கோரிக்கை வைத்த ஜூனியர் NTR

x

வெற்றிமாறன் இயக்கத்தில் நேரடி தமிழ் படத்தில் நடிக்க தனக்கு விருப்பம் இருப்பதாக, ஜூனியர் என்டிஆர் தெரிவித்துள்ளார். தேவாரா திரைப்படக் குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, வெற்றிமாறனின் இயக்கத்தில் தனக்கு நேரடி தமிழ் படத்தில் நடிக்க விருப்பம் இருப்பதாக கூறிய ஜூனியர் என்.டி.ஆர், அப்படத்தை தெலுங்கு மொழியில் மொழிமாற்றம் செய்ய வேண்டுமெனக் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்