வேங்கைவயல் வழக்கு - சென்னை உயர்நீதிமன்றம் கேட்ட கேள்வி
வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டியில், மலம் கழந்த விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. ராஜ்கமல் என்பவர் தாக்கல் செய்திருந்த இந்த மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் நேற்று விசாரித்தது.
அப்போது அரசு தரப்பில், இதுவரை 324 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளதாகவும், சிபிசிஐடி விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறினர். மேலும், விசாரணையை முடிக்க 8 வார கால அவகாசம் கேட்கப்பட்டது. அப்போது இந்த வழக்கின் விசாரணை எவ்வளவு நாட்கள் நடைபெறும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின்னர், இந்த வழக்கின் விசாரணை, ஏப்ரல் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Next Story