கோயில் முன் அசையாமல் கிடந்த சிறுவர்கள்.. ஊரையே உறையவைத்த ரெட்டை கொலை.. அரக்கனாக மாறிய அப்பாவின் நண்பர்.. திடுக்கிட வைத்த காரணம்.. நடந்தது என்ன?

x

வேலூர் மாவட்டத்தைச் சோகத்தில் ஆழ்த்திய கொடூர சம்பவம்

நள்ளிரவு ஏரிக்கரை ஓரத்திலிருந்த கோயில் முன் கண்ட காட்சிகள் ஊர் மக்களையே அதிரச் செய்து இருக்கிறது

கோயில் முன்பாக கிடத்தப்பட்டிருந்த 6 வயது சிறுவன் தர்ஷனின் சடலத்தையும் மற்றும் அவனது தம்பி யோகித் சடலத்தையும் அதிகாரிகள் ஆம்புலன்ஸில் ஏற்றினர்.

எதற்காக இந்த இரக்கமற்ற படுகொலை...?

வேலூர் மாவட்டம் மாதனூர் பகுதியை சேர்ந்தவர் யோகராஜ் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார். யோகராஜூக்கு திருமணமாகி தர்ஷன், யோகித் என்ற இரு மகன்கள் உள்ளனர்.

இவர் சிங்களபாடியை சேர்ந்த கட்டிட கான்ட்ராக்டர் சரவணனுடன் நீண்ட காலமாக வேலை பார்த்து வந்து இருக்கிறார். இதனால் அவரது குடும்பத்துடன் நல்ல நெருக்கம் ஏற்பட்டு இருக்கிறது.

இதன் காரணமாக சரவணின் மூத்த மகன் வசந்தகுமாரும் யோகராஜுடன் நல்ல தொடர்பில் இருந்ததன் காரணமாக அடிக்கடி அவரது வீட்டிற்கு வந்து சென்று இருக்கிறார். மேலும் யோகராஜின் மகன்களுடன் நன்றாகப் பழகி வந்து இருக்கிறார்.

மேஸ்திரியின் மகன்களை அழைத்து சென்ற கான்ட்ராக்டர் மகன்

இந்த நிலையில் சம்பவத்தன்று இரு சிறுவர்களுக்கும் தின்பண்டங்கள் வாங்கி தருவதாகக் கூறி தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று இருக்கிறார் வசந்தகுமார்.

பரபரப்பு மியூசிக் உடன் சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தவும்

வெளியே சென்ற மகன்கள் இருவரையும் நீண்ட நேரமாக காணாததால் சந்தேகமடைந்த யோகராஜ், வசந்தகுமாரைத் தொடர்பு கொண்ட போது, அவரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதால் பதற்றம் அடைந்து இருக்கிறார்.

இதே நேரத்தில் இரு சிறுவர்களின் சடலம் ஏரிக்கரையோரமாக கிடப்பதாக வந்த தகவல் யோகராஜை நிலைகுலையச் செய்து இருக்கிறது.

இரு சிறுவர்களையும் கொலை செய்ததாக சலமின்றி கூறிய இளைஞர்

தொடர்ந்து வசந்தகுமாரைப் பிடித்து நடத்திய விசாரணையில் சிறுவர்கள் கத்தியதால் அவர்களது வாயை அமுக்கியதில் இருவரும் உயிரிழந்து விட்டதாகச் சலனமின்றி கூறி இருக்கிறார்.

வசந்தகுமார் பொறியியல் படிப்பை முடித்த நிலையில் தந்தைக்கு உதவியாக இருந்து வந்து இருக்கிறார். கடந்த ஒரு வருடத்திற்கு முன் திருமணமான நிலையில் ஆறே மாதத்தில் மனைவி பிரிந்து சென்றதாகக் கூறப்படுகிறது.

அதிலிருந்தே மன உளைச்சல் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த சம்பவம் நடந்த நிலையில்.. மனநிலை பாதிப்படைந்ததால் கொலை செய்தாரா அல்லது சிறுவர்களிடம் அத்துமீற முயன்று

அதன் காரணமாகக் கொலை நடந்து இருக்கலாமா என பல்வேறு கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. இரு சிறுவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அந்த குடும்பத்தையே மீளாத் துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது


Next Story

மேலும் செய்திகள்