பலியிடப்பட்ட ஆடு, கோழிகள் - மசாலாவே இல்லாத கறி குழம்பு.. வினோத சாப்பாடு செய்யும் மக்கள்
மேலூர் அருகே வேப்பிலையுடன் கறி சமைக்கும் வினோத சமத்துவ திருவிழா கொண்டாடப்பட்டது. சுந்தரராஜபுரத்தில் உள்ள ஐந்துமுளி சுவாமி கோவில் ஆடித்திருவிழாவில் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்தவர்கள் நேர்த்திக்கடனாக விடப்பட்ட ஆயிரக்கணக்கான ஆடு, கோழிகள் பலியிடப்பட்டது. தொடர்ந்து, அதனுடன் மசாலா கலக்காமல் வேப்பிலையை பயன்படுத்தி சமையல் செய்யப்பட்டது. அதனை சாமிக்கு படையலிட்டு வழிபட்ட மக்கள் பிரித்து வீட்டுக்கு கொண்டு சென்றனர்.
Next Story