பைக் கூட செல்ல முடியாத மலைப்பகுதி... ஆசிரியர்களே வழியை சீரமைத்து செல்லும் அவலம்

x

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவில் உள்ளது, ஜாத்தான் கொள்ளை மலை கிராமம். இந்த மலை கிராமங்களில் அரசு நடுநிலைப்பள்ளியும், உண்டு உறைவிட பள்ளி யும் உள்ளது. சுமார் 200 பேர் பயிலும் இப்பள்ளியில், 9 ஆசிரியர்கள் பாடங்களை நடத்தி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் கூட செல்ல முடியாத மலைப்பகுதியில் இவர்கள் பயணம் சவாலாகவே உள்ளது. இவர்கள் செல்லும் பாதையில் 9 இடங்களில் ஆறுகள் வழியே நடைபயணமாக சென்று வருகின்றனர். இந்நிலையில், தொடர் மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளின் படிப்பு பாதிக்க கூடாது என்ற நோக்கத்தோடு தாங்களாகவே வழிகளை சீரமைத்து பள்ளிக்குச் சென்று பாடம் நடத்தி விட்டு மீண்டும் சிரமப்பட்டு வீடு திரும்புகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்