ஏழை கூலி தொழிலாளியின் மகன் சாதனை - 7.5% இட ஒதுக்கீட்டில் கிடைத்த இடம்

x

வேலூர் மாவட்டம், காட்பாடி கழிஞ்சூர் பகுதியை சேர்ந்த முருகேசன் என்ற ஏழை கூலி தொழிலாளியின் மகன் சரவணன் பிளஸ் டூ தேர்வில் 586 மதிப்பெண்கள் பெற்று தமிழக அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் விரும்பிய பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார். ஆடுகளை வளர்த்து வாழ்வாதாரம் நடத்தி வரும் தனது பெற்றோருக்கு உதவியபடியே படிப்பில் கவனம் செலுத்தி அதிக மதிப்பெண் பெற்றதாக மாணவர் சரவணன் தெரிவித்தார். 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொண்ட சரவணன் எதிர்காலத்தில் அரசு அதிகாரியாக ஆக விருப்பம் என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்