வேலூரில் புதிய கிளையை திறந்தது ராமராஜ் காட்டன்
வேலூர் மாவட்டம் காட்பாடியில் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் 306ஆவது கிளை திறக்கப்பட்டது.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட விஐடி பல்கலைக்கழக நிறுவனர் விசுவநாதன் ரிப்பன் வெட்டி ஷோரூமை திறந்து வைத்தார். ஹோட்டல் டார்லிங் ரெசிடென்சியின் நிர்வாக இயக்குனர் வெங்கடசுப்பு முதல் விற்பனையை தொடங்கி வைத்த நிலையில் வேலூர் ஸ்ரீ லட்சுமி ஜுவல்லரி சார்பில் கலந்து கொண்ட முகந்த் முதல் விற்பனையை பெற்றுக்கொண்டார். மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்ற ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் B.R அருண் ஈஸ்வர் மற்றும் இணை நிர்வாக இயக்குனர் அஸ்வின் ஆகியோர் விருந்தினர்களையும், வாடிக்கையாளர்களையும் வரவேற்றனர்.
Next Story