தமிழகத்தில் ஒரு சென்டினல் தீவா?.. ஆட்டிபடைக்கப்படும் அழகிய ஊர்.. சாப்பாட்டில் கான்கிரீட் சிமெண்ட்..
வேலூரில் அமைந்துள்ள பசுமை மிகு அழகிய மலைகிராமங்கள் தான் இவை...ஆனால் அடிப்படை வசதிகள் எள்ளளவும் இல்லை...
வேலூர் மாவட்டம்...அணைக்கட்டு தாலுகா...ஜவ்வாது மலைத்தொடரில் அமைந்துள்ளது பீஞ்சமந்தை ஊராட்சி...
கட்டியப்பட்டு, தேந்தூர், புளிமரத்தூர், என 14க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் கிட்டத்தட்ட 12,000 பேர் வசிக்கின்றனர்...
சாலை வசதி கிடையாது...சுத்தமான குடிநீர் கிடையாது...மருத்துவ வசதி கிடையாது...
அலைந்து அலைந்து கால்கள் ஓய்ந்து போனது தான் மிச்சம்...
வீடு தேடி குடிநீர் வரும் காலத்தில்...1 கிலோமீட்டர் நடந்து சென்று...ஊருக்கு ஒதுக்குப் புறமாய் உள்ள...பொதுக்கிணற்றில்...சேறும் சகதியுமான நீரை இரைத்துத் தான் இந்த மலைகிராம மக்கள் குடிக்க வேண்டும்...சமைக்க வேண்டும்...
அதைவிட்டால் மலையில் இருந்து வரும் ஊற்று நீர் தான் ஒரே வழி...
பள்ளிக் குழந்தைகள் படாத பாடு படுகின்றனர்...
பள்ளிக்கட்டடமா அல்லது பாழடைந்த கட்டடமா என வித்தியாசமே தெரியவில்லை...
பள்ளி வகுப்பறைகள், சமையற்கூடத்தில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கிடக்கின்றன...
சிமெண்ட் பூச்சுகள் விழுந்த அரிசி மூட்டைகளில் இருந்துதான் குழந்தைகளுக்கு உணவு சமைக்கும் அவலம்...
மாதாமாதம் பணம் செலவழித்து... தண்ணீர் வாங்கி வந்து... அதைக் கொண்டு சமைத்துத் தான் பள்ளிக் குழந்தைகளுக்குக் கொடுக்கின்றனர்...
அதுவும் நல்ல தண்ணீர் இல்லை...இதே கலங்கல் நீர் என்பது தான் கொடுமையிலும் கொடுமை...
குழந்தைகளுக்கு கழிவறை வசதி கூட கிடையாது... அவசரம் என்றால் வீட்டிற்குத் தான் நடந்து செல்ல வேண்டும்...
தொலைதூரத்தில் வீடென்றால் ஆபத்தான காட்டுப் பகுதிகளுக்குத் தான் செல்ல வேண்டும்...
இதற்கு பயந்தே பல குழந்தைகள் பள்ளிக்கு வரவே தயங்குகின்றனர்...
சேறு, சகதி கலந்த தண்ணீரைக் குடிப்பதால் அடிக்கடி மக்கள் நோய்வாய்ப் படும் அவல நிலை...
மருத்துவம் பார்க்க 20 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையம் தான் செல்ல வேண்டும்...
வனத்துறை சார்பில் 16 லட்ச ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட நீர்த்தேக்க தொட்டிகளும் பராமரிப்பின்றி கிடக்கின்றன...
எப்போது எங்கள் துயரம் தீரும் என காத்திருக்கும் இந்த மலைவாழ் மக்களுக்கு அரசுதான் கருணை காட்ட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது...