சிறைக் கைதி சிவக்குமார் தாக்கப்பட்டது உண்மையா? - அரசு மருத்துவமணையில் பரிசோதனை..

x

வேலூர் மத்திய சிறையில் சித்தரவதை செய்யப்பட்ட கைதியை, பரிசோதனைக்காக போலீசார், சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

வேலூர் மத்தியசிறையில் இருந்த ஆயுள்தண்டனை கைதி சிவகுமாரை சிறைத்துறை அதிகாரிகள் வீட்டு வேலைக்கு பயன்படுத்தியும், சிறைத்துறை அதிகாரி வீட்டில் நகைகள் திருடு போனதாக கூறி துன்புறுத்தியாக வழக்கு தொடரப்பட்டது. இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சிறைத் துறை டிஐஜி ராஜலட்சுமி, சிறை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் ஆகிய மூன்று பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதி சிவகுமாரை வேலூர் சிபிசிஐடி போலீசார், சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து சிபிசிஐடி அதிகாரிகள் முன்னிலையில் சிவக்குமார் தாக்கப்பட்டது உண்மையா என்ற கோணத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்