ரூ.20 ஆயிரம் லஞ்சத்துக்கு ஆசைப்பட்டு Life-ஐ தொலைத்த Ex மாநகராட்சி கமிஷனர்

x

வேலூரில், 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில், மாநகராட்சி முன்னாள் ஆணையருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாநகராட்சி ஆணையராக 2017-ம் ஆண்டு பணியாற்றி வந்தவர் குமார். இவர், கொசு மருந்து அடிக்கும் மாநகராட்சி ஒப்பந்த‌தார‌ரிடம் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது, கையும் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு வேலூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ராதாகிருஷ்ணன், முன்னாள் மாநகராட்சி ஆணையர் குமாருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். மேலும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த‌தோடு, அபராத‌த் தொகையை கட்ட‌த் தவறினால், கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். தண்டனை பெற்ற முன்னாள் ஆணையர் குமார், சில மாதங்களுக்கு முன்பு, தூத்துக்குடியில் துணை ஆணையராக பணியாற்றி, ஓய்வு பெறும் சமயத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்