இருதரப்பினர் இடையே எழுந்த பிரச்சனை.. கோயில் பூசாரி செய்த செயல்.. பாய்ந்த வழக்கு
வேலூர் மாவட்டம், கே.வி. குப்பம் அருகே கோயில் இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, பூசாரி மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கெம்மங்குப்பம் கிராமத்தில் பொது இடத்தில் இருந்த காளியம்மன் கோயிலில் வழிபாடு மற்றும் திருவிழா நடத்துவது தொடர்பாக இருதரப்பினர் இடையே பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில், அந்த கோயிலை கட்டி, வழிபாடு நடத்தி வந்த லோகநாதன் என்பவர், கடந்த 6-ம் தேதி திடீரென கோயிலை இடித்து, அதிலிருந்த சிலையை எடுத்துச் சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து ஒரு தரப்பினர் காவல் நிலையத்திலும், ஆட்சியர் அலுவலகத்திலும் புகார் அளித்தனர். தொடர்ந்து, குடியாத்தம் கோட்டாட்சியர் சுபலட்சுமி தலைமையிலான குழு பேச்சுவார்த்தை நடத்தி, இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பியது. இதனிடையே, கோயில் இடிக்கப்பட்டது தொடர்பாக, தேவரிஷிகுப்பம் கிராம நிர்வாக அலுவலர் ராஜா மற்றும் கெம்மங்குப்பத்தைச் சேர்ந்த நவின்குமார் ஆகியோர் அளித்த புகாரின் பேரில், லோகநாதன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.