துரியோதனனை வதம் செய்த பீமன் - கண்டுகளித்த ஏராளமான பக்தர்கள்
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் துரியோதனன் வதம் செய்யும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த விழா, கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான துரியோதனனை போரில் வதம் செய்யும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்ட துரியோதனன் சிலையின் தொடையில், பீமன் வேடம் அணிந்தவர் கதாயுதத்தால் அடித்து வதம் செய்ததை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.
Next Story