இடிக்கப்பட்ட கோயிலில் நடந்த அதிசயம்.. கையெடுத்து கும்பிட்ட மக்கள் | Vellore

x

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே இரு தரப்பு பிரச்சினை காரணமாக இடிக்கப்பட்ட கோவிலில் மீண்டும் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

கெம்மங்குப்பம் கிராமத்தில் கடந்த 6ஆம் தேதி இரு தரப்பு பிரச்சினையில், கோவில் இடிக்கப்பட்டு அம்மன் சிலை எடுத்து செல்லப்பட்டது. இது தொடர்பாக குடியாத்தம் கோட்டாட்சியர் சுபலட்சுமி தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, காளியம்மன் சிலை, கே.வி.குப்பம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், இடிக்கப்பட்ட கோவிலில் மீண்டும் காளிம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கே.வி.குப்பம் வட்டாட்சியர் சந்தோஷ் தலைமையில் அறநிலையத் துறை அதிகாரிகள் அடங்கிய ஏழு பேர் கொண்ட குழுவினர், ஊர்மக்கள் இதில் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்