கண்ட காட்சி... விழிபிதுங்கிய போலீசார்...குவிந்து கிடந்த `பார்ட்ஸ்' பகலில் மெக்கானிக்; இரவில்...

x

மெக்கானிக் ஷெட் என்ற பெயரில் இரண்டு கோடி மதிப்பிலான 41 திருட்டு கார்கள், கார் உதிரி பாகங்களை விற்று வந்தவரை போலீசார் கைது செய்தனர். இதன் பின்னணியை பார்க்கலாம் விரிவாக..

வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகர் பகுதியை சேர்ந்த தேவக்குமார் என்பவர், காட்பாடி அடுத்த வெங்கடேசபுரம் பகுதியில் கார் மெக்கானிக் ஷெட் நடத்தி வந்துள்ளார்.

ஆனால் அங்கு கார்கள் பழுது பார்ப்பது மட்டுமல்லாமல், பல திருட்டுகளும் அரங்கேறுவதாக புகார்கள் குவிந்துள்ளன.

தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து காரை திருடி வருபவர்களிடம் இருந்து, திருட்டு காரை வாங்கி, இரவோடு இரவாக அதில் உள்ள உதிரி பாகங்களை பிரித்து விற்பனை செய்து வந்துள்ளார்..

அத்துடன் நல்ல கன்டிஷனில் உள்ள கார்களின் நம்பர் பிளேட்டை மாற்றியும் விற்பனை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், தகவலின் படி தேவக்குமாரின் கார் ஷெட்டில் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று சோதனை செய்தனர். அங்கு போலீசாரையே விழி பிதுங்க செய்தது அங்கு கண்ட காட்சி...

மெக்கானிக் ஷெட் முழுவதும் காரின் உதிரி பாகங்கள் குவிந்து கிடக்க...ஏராளமான கார்களும் நிறுத்தப்பட்டிருந்தன..

கிட்டத்தட்ட திருட்டு கார் விற்பனை செய்யும் மாஃபியா போலவே செயல்பட்டு வந்துள்ளார் என்பதை உறுதி செய்தது உதிரி பாகங்களால் நிறைந்திருந்த மெக்கானிக் ஷெட்..

அங்கு மேற்கொண்ட சோதனையில், உரிய ஆவணங்கள் இல்லாத 41 திருட்டு கார்களும், உதிரி பாகமாக 27 கார்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

மெக்கானிக் ஷெட்டில் பறிமுதல் செய்யப்பட்ட 41 கார்களின் மதிப்பு சுமார் 2 கோடி என வாய் பிளக்க வைத்தது போலீசார் அளித்த தகவல்...

பின்னர் தேவகுமாரை கைது செய்த போலீசார் காட்பாடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த கார் திருட்டில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்