வியாபாரி தொடர்ந்த வழக்கு - பேடிஎம் நிறுவனத்திற்கு நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு

x

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது கணக்கை கடந்த 2022ம் ஆண்டு பேடிஎம் நிறுவனம் திடீரென முடக்கியுள்ளது. ஒரு லட்சம் ரூபாய் வரவு வைத்திருந்த நிலையில், முறைகேடாக பரிவர்த்தனை நடந்ததால், கணக்கு முடக்கப்பட்டதாக பேடிஎம் தரப்பில் கூறப்பட்டது. இதனால் பேடிஎம் நிறுவனத்திற்கு எதிராக வேலூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் பாலகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணைக்கு வந்த போது, சேவை குறைபாடு உறுதியாகியுள்ளதாகவும், இதனால் பாலகிருஷ்ணனுக்கு ஒரு லட்சம் இழப்பீடு வழங்கவும் பேடிஎம் நிறுவனத்திற்கு உத்தரவிட்டார். மேலும், 10 ஆயிரம் ரூபாய் அபராதத்தோடு, முடக்கப்பட்ட கணக்கை செயல்பாட்டுக்கு கொண்டு வரவும் உத்தரவிடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்