"உன்னையும் இடிப்போம் உன் வீட்டையும் இடிப்போம்" - மேயர் தாக்கியதாக பரபரப்பு புகார்

x

மாநகராட்சி பணி குறித்து கேள்வி கேட்ட நபரை வேலூர் மேயர் தாக்கியதாக அளிக்கப்பட்ட புகார் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாநகராட்சி 31வது வார்டில் சாலை அமைக்கும் பணிக்காக நித்தியானந்தன் என்பவரின் வீட்டின் முன்பு கழிவுநீர் கால்வாய் மீது போடப்பட்டிருந்த ஸ்லாப்புகள் இடித்து அகற்றப்பட்டன. இதுகுறித்து கேள்வி எழுப்பியதற்காக மாநகராட்சி மேயர் சுஜாதா தன்னை தாக்கியதாக நித்தியானந்தன் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து அவரது உறவினர்கள் தாக்கியதில் கை முறிந்ததாக குற்றம்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்