மருமகளுக்கே தெரியாமல் கருவை கலைத்து மகனை ஒளித்து வைத்த மாமியார்

x

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூரை அடுத்த ஓட்டேரி பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஷ்வா. இவரும் திருப்பத்தூர் மாவட்டம் மாதனூரை அடுத்த திருமலை குப்பத்தை சேர்ந்த ஐஸ்வர்யாவும் கல்லூரி படிக்கும் போது காதலித்து வந்தனர். காதல் விவகாரம், விஷ்வா குடும்பத்தினருக்கு தெரிய வரவே இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா ஊர் பெரியவர்கள் முன்னிலையில் தான் கர்ப்பிணியாக இருப்பதாக கூறி பேச்சுவார்த்தை நடத்தி காதல் கணவர் விஷ்வாவுடன் திருமணம் செய் கொண்டார். திருமணத்திற்கு பின் தன் கருக்கலைந்துவிட்டதாக கூறியவர், மீண்டும் கர்ப்பம் அடைந்ததாக கூறியுள்ளார். அந்த கருவை தன் மாமியார் டீயில் மாத்திரை கலந்து கலைத்ததாகவும் புகார் கூறியுள்ளார். இந்த நிலையில், தன்னையும் தனது கணவரையும் சேர்ந்து வாழ விடாமல் மாமியார் தடுப்பதாகவும் கூறி, விஷ்வா வீட்டின் முன் அமர்ந்த ஐஸ்வர்யா தர்ணா செய்ய தொடங்கினார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஐஸ்வர்யாவிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவரை அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்