பாலம் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் பாய்ந்த பைக்.. - பரிதாபமாக பலியான இளைஞர்

x

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, பாலம் கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்தார்.

குடியாத்தம் அடுத்த சேர்த்துவண்டை பகுதியில் இருந்து நெல்லூர்பேட்டை வரை, புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குடியாத்தம்- பரதராமி சாலையில் சித்தூர் கேட் அருகே, புறவழிச்சாலை பாலம் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்நிலையில், பரதராமிலிருந்து குடியாத்தம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற சேர்த்துவண்டை பகுதியை சேர்ந்த அர்ஜுன் என்பவர், இருசக்கர வாகனத்துடன் பள்ளத்தில் தவறி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பிரேதப் பரிசோதனைக்காக உடல் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்