திமுக vs பாஜக - திரும்பி பார்க்க வைத்த 2 பேனர்கள்.. குழம்பி கிடக்கும் வேலூர்
வேலூரில் சுரங்கப்பாதை திட்டம் தொடர்பாக, திமுக - பாஜக இடையே போட்டிக்கு போட்டியாக பேனர் வைத்துள்ளது கவனம் பெற்றுள்ளது. கிரீன் சர்க்கிள் மேம்பாலத்தின் அடியில், சுமார் 7 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பில், சுரங்க நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது. வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் போராடியதால் இந்த சுரங்க நடைபாதை அமைக்கப்பட்டுள்ளதாக திமுகவினர் பேனர் வைத்துள்ளனர். அதற்கு அருகிலேயே, தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையத்தால் கொண்டு வரப்பட்ட சுரங்கப்பாதை திட்டம் என பாஜகவினர் பேனர் வைத்துள்ளனர்.
Next Story