காட்பாடியில் அசைவின்றி கிடந்த 2 இளைஞர்கள்.. விசாரித்த போலீசுக்கு ஷாக் மேல் ஷாக்
வேலூர் காட்பாடியில் வலி நிவாரண மாத்திரைகளை கொண்டு போதை ஊசி தயாரித்து விற்பனை செய்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வேலூர் காட்பாடி திருவள்ளுவர் நகரில் சிலர் போதை ஊசி தயார் செய்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து போலீசார் சோதனை செய்த போது 2 இளைஞர்கள் போதை ஊசி போட்டு கொண்டு
மயக்கத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை பிடித்து
போலீசார் விசாரணை நடத்திய போது இருவரும் வலி நிவாரண மாத்திரைகள், திரவ மருந்துகளை கொண்டு போதை ஊசி தயாரித்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இருவரையும்
கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 70 வலி நிவாரண மாத்திரைகள் 3 மருந்து பாட்டில்கள், அதை செலுத்துவதற்காக வைத்திருந்த 5 ஊசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
போதை ஊசிகளை கல்லூரி மாணவர்களிடம் 500 வரை ரூபாய் விற்ற இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.