கோவை வெள்ளியங்கிரி மலை இன்றுடன் முடிவு.. பக்தர்கள் கவனத்திற்கு..
கோவை வெள்ளியங்கிரி மலையேறுவதற்கு பக்தர்களுக்கு அளித்த அனுமதி இன்றுடன் முடிவடைகிறது. பூண்டி அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள வெள்ளியங்கிரி மலை தமிழகத்திலேயே மிகவும் கடினமான மலைப்பாதையை கொண்டு உள்ளது. வெள்ளியங்கிரி மலைக்கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கடந்த பிப்ரவரி 12-ம் தேதி முதல் அனுமதியளிக்கப்பட்டது. தினந்தோறும் ஏராளமான பக்தர் கள் மலையேறிவந்தனர். சிவராத்திரி மற்றும் சித்ரா பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்தனர். இதுவரை சுமார் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாக மலையேறி சுவாமியை தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளியங்கிரி 5, 6 மற்றும் 7-ஆவது மலையில் கடும் குளிர் நிலவுகிறது. மேலும் கோவிலுக்குச் செல்லும் மலைப்பாதைகள் சேதம் அடைந்த நிலையில் உள்ளதால், பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இன்று முதல் வெள்ளியங்கிரி மலையேற்றம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.