ஜாலியாக விளையாடிய மாணவர்களை நொடியில் விழுங்கிய ராட்சத அலை... கண்முன் பார்த்து கதறிய நண்பர்கள்

x

ஜாலியாக விளையாடிய மாணவர்களை நொடியில் விழுங்கிய ராட்சத அலை... கண்முன் பார்த்து கதறிய நண்பர்கள்

விளையாட்டு ஆசிரியரின் அஜாக்கிரதையால், இரண்டு சிறுவர்கள் வேளாங்கண்ணி கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் மாநில அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்க திண்டுக்கல்லில் இருந்து 45 மாணவ மாணவியரை விளையாட்டு ஆசிரியர் ஒருவர் அழைத்து வந்தார். சிலம்பம் போட்டி முடிவடைந்ததை தொடர்ந்து, மாணவர்கள் அனைவரும் வேளாங்கண்ணி கடலில் குளித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட ராட்சச அலையால் இரண்டு சிறுவர்கள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். இதனையடுத்து, இரண்டு மாணவர்களும் சடலங்களாக கரை ஒதுங்கினர். இந்நிலையில், விளையாட்டு ஆசிரியரை பிடித்து, வேளாங்கண்ணி போலீசார் விசாரித்து வருகின்றனர். இரண்டு சிறுவர்களுக்கும் வயது 13 என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்