வேளச்சேரி கேஸ் பங்க் விபத்து மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு
பள்ளத்தின் 90 சதவீதமான பகுதிகளில் ஆய்வு செய்து இதுவரை யாரும் சிக்கவில்லை என்பதை உறுதி செய்தும், குறிப்பிட்ட ஒரு பகுதியில் மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால் மீட்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்.
கட்டுமான நிறுவன ஊழியர் ஒருவர் உள்ளே சிக்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தொடர்ந்து ஆறாவது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்ற நிலையில் துர்நாற்றம் வீசுவது நின்று விட்டதாக தகவல்.
கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் சிவகுமாரை பிடித்து விசாரணை செய்தால் மட்டுமே தீபக் குறித்த தகவல் தெரியவரும் என்பதால் உரிமையாளரை பிடிக்க கிண்டி போலீசார் தீவிரம்.
தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் மீட்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்ட ராட்சத கிரேன்கள் உள்ளிட்ட கருவிகள் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் பணிகளை தொடங்க திட்டம்.
Next Story