பயத்தில் கிடைத்த காய்கறிகளை அள்ளி போட்டு ஓடிய சென்னை மக்களுக்கு இன்று காத்திருந்த அதிர்ச்சி
- சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை குறைந்துள்ளது...
- தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடபட்டது இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை அதிக அளவில் வாங்கிய நிலையில் காய்கறிகளின் விலை நேற்று அதிகரித்து காணப்பட்டது... குறிப்பாக தக்காளியின் விலை 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது...
- இந்நிலையில் தற்பொழுது தற்காலியின் விலை கிலோ 30 ரூபாய் குறைந்து, 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது...
- அதேபோல் பிற காய்கறிகளின் விலை கிலோவிற்கு 20 முதல் 30 ரூபாய் வரை குறைந்துள்ளது.
- வெங்காயம் கிலோ 60 ரூபாய் வரையிலும், உருளை 45 ரூபாய் வரையிலும், சின்ன வெங்காயம் 80 ரூபாய் வரையிலும்,
- ஊட்டி கேரட் 50 ரூபாய் வரையிலும் மற்றும் கர்நாடக கேரட் 30 ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது...
- அதேபோல் பீன்ஸ் 160 ரூபாய் வரைக்கும், கர்நாடக பீட்ரூட் 30 ரூபாய் வரைக்கும், ஊட்டி பீட்ரூட் 65 ரூபாய் வரைக்கும்,
- வெண்டை 40 ரூபாய் வரைக்கும், கத்திரி 30 ரூபாய் வரைக்கும், பாகற்காய் 50 ரூபாய் வரைக்கும் விற்பனையாகிறது...
- மேலும் முருங்கை 60 ரூபாய் வரையிலும், பட்டாணி 250 ரூபாய் வரையிலும், இஞ்சி 170 ரூபாய் வரையிலும்,
- பூண்டு 350 ரூபாய் வரையிலும், அவரை 80 ரூபாய் வரையிலும், தேங்காய் 50 ரூபாய் வரையிலும் விற்பனையாகிறது...
Next Story