காய்கறிகள் கிடுகிடு விலை உயர்வு... ரேட்டை கேட்டு தலைசுற்றும் இல்லத்தரசிகள்

x

காய்கறிகள் கிடுகிடு விலை உயர்வு... ரேட்டை கேட்டு தலைசுற்றும் இல்லத்தரசிகள்

தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விலை உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர். விளைச்சல் சரிந்ததால் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது...

திருவாரூரில் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி தற்பொழுது ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் பீன்ஸ், அவரை, பாகற்காய் 2 மடங்கும், முருங்கை 4 மடங்கும் விலை உயர்ந்துள்ளது...

தேனி மாவட்டத்தில் தக்காளி விளைச்சல் குறைவாக உள்ளதால் விலை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இப்போது 120 ரூபாயாக அதிகரித்துள்ளது... தற்போது 14 கிலோ கொண்ட ஒரு தக்காளி பெட்டி ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது...

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சந்தையில் தக்காளி 65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது... சில்லறை விற்பனையில் விலை 85 ரூபாயாக உள்ளது... தக்காளி விலை உயர்வால் வியாபாரிகள் மகிழ்ச்சியும், இல்லத்தரசிகள் கவலையும் அடைந்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்