அரசு டாக்டருக்கு கொலை மிரட்டல்... விசிக பிரமுகருக்கு நேர்ந்த கதி - பரபரப்பு சிசிடிவி காட்சிகள்
அரசு மருத்துவருக்குக் கொலை மிரட்டல் விடுத்த விசிக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு விசிக பிரமுகரான சேது என்பவர் தனது தந்தையைச் சிகிச்சை அளிப்பதற்காகக் கூட்டிச் சென்று இருக்கிறார். அப்போது பணியிலிருந்த மருத்துவர் ரேகா நோயாளிக்கான சீட்டை பெற்று வருமாறு கூறி இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சேது மருத்துவர் ரேகாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொலை மிரட்டலும் விடுத்து இருக்கிறார். மேலும் அவரை தனது செல்போனில் வீடியோவும் எடுத்து இருக்கிறார்.இந்த சம்பவங்கள் அனைத்தும் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனடிப்படையில் மருத்துவர் ரேகா அளித்த புகாரின் அடிப்படையில் சேதுவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story