தனியார் கடையில் இந்தியில் விளம்பரம்..! பெயிண்ட் அடித்து அளித்த விசிக.. கரூரில் பரபரப்பு சம்பவம்

x

கரூர் பேருந்து நிலையம் பகுதியில் செல்போன் கடையில், தீபாவளியையொட்டி உரிமையாளர் ஆஃபர் குறித்து ஹிந்தியில் விளம்பரம் ஸ்டிக்கரை ஒட்டியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விசிகவினர், ஸ்டிக்கரை அகற்றுமாறு உரிமையாளரிடம் செல்போனில் கேட்டுள்ளனர். உரிமையாளர் அகற்றாததால், விசிக நிர்வாகி ராஜா தலைமையில் திரண்ட கட்சியினர், இந்தி எழுத்துக்களை கருப்பு பெயிண்ட் அடித்து அழித்தனர். தமிழ் வாழ்க என கோஷம் எழுப்பியவர்கள் தமிழகத்தில் ஒருபோதும் இந்தி திணிப்பு இருக்க கூடாது என்றனர். இதுகுறித்து கடை உரிமையாளர் ராஜேந்திரனிடம் பேசியபோது, இங்கு வடமாநில தொழிலாளர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கும் ஆஃபர் தெரிய வேண்டும் என்பதற்காகவே விளம்பரம் வைத்தோம், எனக்கே இந்தி தெரியாது என்றார். அராஜகத்தில் ஈடுபட்ட விசிகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்